Saturday, January 29, 2011

மின்விசிறி


தூணில் கட்டிவைத்த
பிள்ளை விளையாட்டோ,
நீ சுற்றுவது!!
மின் தாக்கிப் பலர் மடிய,
நீ மட்டும்
அந்தரத்தில் தொங்கி உனக்கு
உயிர் கொடுத்தமைக்கு
மின்னுக்கு விசிறி ஆனாயோ....
 
 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai270.htm)

பொறாமை




உன்னிடம் ஓயாமல் பேசும்
என் இதயத்தின் மீது பொறாமை
என் இதழ்களுக்கு......

                    - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1832/)

Wednesday, January 26, 2011

கோடை வெய்யில்



மண்ணில் விழுந்ததால்
நீயுமா
மனிதனானாய்!
ஏமாற்றுகிறாயே
உன் கானல் நீரால்....

 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)



#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)



கோடை மழை


பூமித் தாயின்
வறண்ட கன்னங்களை
வான் முத்தமிட்டதோ!
ஆதலின்
ஈரம் தங்கிவிட்டதோ!....

 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)


#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)

உன் நினைவுக‌ள்



கதிரவன் கண்விழித்த‌
விடியற்காலை தொட்டு,
தன் ஒளியை
சந்திரனுக்குத் தாரைவார்த்த
மாலை வரை
என் உள்ளமெல்லாம்
உன் நினைவே,
என் கண்கள் காணுகின்ற
காட்சிகளில் எல்லாம் நீயே..
என் செவிகள் கேட்பது
என்னுள் இருந்து
நீ உரைக்கும் வார்த்தைகளே..
இவ்வாறே
நான் உற‌ங்கினாலும்
உற‌ங்க‌ ம‌றுக்கிற‌து
உன் நினைவுக‌ள்
என் சுவாச‌த்தைப்போல‌...

- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_september2009.htm)

உன் வ‌ருகைக்காக



கதிரவன் முகம் பார்த்து
நாண‌முற்று
ரோஜாக்கள் சிவக்க‌
அவ்வ‌ழ‌கில் ம‌ய‌ங்கிய‌
தேனீக்க‌ள் அத‌னுள்
தேன் உண்டு க‌ளிக்க‌
ம‌ல‌ரினும் மெல்லிய‌
இற‌குக‌ள் கொண்ட‌
வ‌ண்ண‌ வ‌ண்ண‌
வ‌ண்ண‌த்துப்பூச்சிக‌ள்
சிற‌க‌டித்துப்பூங்காவெங்கும்
ப‌ற‌க்க‌ அவைக‌ளுள் ஒன்றாக‌
என் ம‌ன‌மும்
ப‌ற‌ந்து திரிந்து
ஆர்ப்ப‌ரித்த‌து
உன் வ‌ருகைக்காக‌ காத்திருந்த‌
ஒவ்வொரு விநாடியும்...

  - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_april2010.htm)

Sunday, January 23, 2011

காகிதத் திரையோவியம்






அஸ்தமித்த காட்சிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கதை பேசும்...
சிற்றெறும்புகளாய்
ஒடிக்கொண்டிருக்கும்
நம் வாழ்வில்
நம் பார்வையிலிருந்து தவறிய‌
காட்சிகளை உற்றுநோக்கச்
செய்யும்...
வண்ணங்கள் வார்த்தை
ஜாலம் ஆடும்
காகிதத்திரை ஒவியம்...!


- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai578.htm)