Monday, January 3, 2011

மழைக்கவிதை


மழைக்கவிதை

ஆகாயத்தில்
கரிநாள்
கார்மேகங்கள் சூழ்ந்து
மத்தள‌ம் இடித்து
பிரியாவிடை கொடுத்து
மழைத்துளி ஒவ்வொன்றையும்
பூமிக்கு தாரைவார்த்தது...



எய்திய வேகத்தில்
மண்ணை அடையும்
துளிகள் அதனோடு
ஐக்கியமாகி வளம்சேர்த்தது...
கரிய ஒழுங்கைகளை
அடையும் துளிகள்
தாயின் கைவிட்டோடிய‌
குழந்தை மீண்டும்
தாயிடமே குதித்தோடுவது போல்
விழுந்த வேகத்தில்
வானை தொட
தெரித்தும் தோல்வி அடைய
தலைதாழ்த்தி அமைதியாய்
கால்வாயை நாடுகின்றன...

சமுத்திரத்தில் மோட்சம்
அடைய அன்று
கதிரொலிகளால்
வானை அடைந்து
மீண்டும் மழைத்துளியாய்
மண்ணை சேர.......

- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3832)
திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=311010221&format=html)

1 comment:

  1. இது, தமிழ்க் கவிதையா? அறிவியல் கவிதையா? ஃபோடோ சிந்தெஸிஸ் பேசும் தமிழ்க் கவிதை... ஆங்கிலத்தில் Intellectual Standard என்பார்கள்... உங்களின் சிந்தனைச்செரிவு அபாரம் ...வாழ்த்துக்கள்...

    ReplyDelete