Saturday, January 8, 2011

நட்சத்திரம்


வான வீதியில் பகலெல்லாம்
மேகங்களுக்கு இடையே
தென்றலுடன்
துள்ளி குதித்தாடிய
வான் மகள்
உலாவிய இடத்தில் இருந்து
வழித் தவறாதிருக்க
அவள் ஆடையிலிருந்து
சிதறிய முத்துக்கள்
இரவில் அவளுக்கு வழிகாட்டும்
நட்சத்திரங்களாய் மின்னுகின்றனவோ....

             - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)




#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1793/)

2 comments:

  1. 'வழித் தவறாதிருக்க
    அவள் ஆடையிலிருந்து
    சிதறிய முத்துக்கள்' .. மிக அழகான உருவகம்...

    ReplyDelete
  2. நடைப் பழக்கி நாவினிக்க பாராட்டும் தங்களின் பெருந்தன்மைக்கு நன்றி

    ReplyDelete