Saturday, January 29, 2011

மின்விசிறி


தூணில் கட்டிவைத்த
பிள்ளை விளையாட்டோ,
நீ சுற்றுவது!!
மின் தாக்கிப் பலர் மடிய,
நீ மட்டும்
அந்தரத்தில் தொங்கி உனக்கு
உயிர் கொடுத்தமைக்கு
மின்னுக்கு விசிறி ஆனாயோ....
 
 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai270.htm)

பொறாமை




உன்னிடம் ஓயாமல் பேசும்
என் இதயத்தின் மீது பொறாமை
என் இதழ்களுக்கு......

                    - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1832/)

Wednesday, January 26, 2011

கோடை வெய்யில்



மண்ணில் விழுந்ததால்
நீயுமா
மனிதனானாய்!
ஏமாற்றுகிறாயே
உன் கானல் நீரால்....

 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)



#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)



கோடை மழை


பூமித் தாயின்
வறண்ட கன்னங்களை
வான் முத்தமிட்டதோ!
ஆதலின்
ஈரம் தங்கிவிட்டதோ!....

 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)


#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)

உன் நினைவுக‌ள்



கதிரவன் கண்விழித்த‌
விடியற்காலை தொட்டு,
தன் ஒளியை
சந்திரனுக்குத் தாரைவார்த்த
மாலை வரை
என் உள்ளமெல்லாம்
உன் நினைவே,
என் கண்கள் காணுகின்ற
காட்சிகளில் எல்லாம் நீயே..
என் செவிகள் கேட்பது
என்னுள் இருந்து
நீ உரைக்கும் வார்த்தைகளே..
இவ்வாறே
நான் உற‌ங்கினாலும்
உற‌ங்க‌ ம‌றுக்கிற‌து
உன் நினைவுக‌ள்
என் சுவாச‌த்தைப்போல‌...

- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_september2009.htm)

உன் வ‌ருகைக்காக



கதிரவன் முகம் பார்த்து
நாண‌முற்று
ரோஜாக்கள் சிவக்க‌
அவ்வ‌ழ‌கில் ம‌ய‌ங்கிய‌
தேனீக்க‌ள் அத‌னுள்
தேன் உண்டு க‌ளிக்க‌
ம‌ல‌ரினும் மெல்லிய‌
இற‌குக‌ள் கொண்ட‌
வ‌ண்ண‌ வ‌ண்ண‌
வ‌ண்ண‌த்துப்பூச்சிக‌ள்
சிற‌க‌டித்துப்பூங்காவெங்கும்
ப‌ற‌க்க‌ அவைக‌ளுள் ஒன்றாக‌
என் ம‌ன‌மும்
ப‌ற‌ந்து திரிந்து
ஆர்ப்ப‌ரித்த‌து
உன் வ‌ருகைக்காக‌ காத்திருந்த‌
ஒவ்வொரு விநாடியும்...

  - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_april2010.htm)

Sunday, January 23, 2011

காகிதத் திரையோவியம்






அஸ்தமித்த காட்சிகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கதை பேசும்...
சிற்றெறும்புகளாய்
ஒடிக்கொண்டிருக்கும்
நம் வாழ்வில்
நம் பார்வையிலிருந்து தவறிய‌
காட்சிகளை உற்றுநோக்கச்
செய்யும்...
வண்ணங்கள் வார்த்தை
ஜாலம் ஆடும்
காகிதத்திரை ஒவியம்...!


- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai578.htm)

Sunday, January 9, 2011

தொடர்வண்டிப் ப‌ய‌ண‌ம்


வெண்ணிலவு வீடு திரும்ப‌
கதிரவன் கண்விழிக்கும்
சாயல் படர‌...
விடிந்தும் விடியாமலும்
இருந்த அந்தக்
காலைப் பொழுதில்
முத்துமுத்தாய்ப் படர்ந்த‌
பனித்துளிகளில் நனைந்த‌
வயல்வெளிகளும்...
விறைத்து நிற்கும்
காவலர்களைப்போல்
இருபுறமும் அணிவகுத்து
நிற்கும் மரங்களும்...
மீனவன் வலையில்
அகப்படாது பிழைக்க‌
இங்கும் அங்கும் நீந்தும்
உயிர் போராட்டத்தை
தன்னுள் மறைத்து
அமைதியையே ஒலமிடும்
நீரோடைகளும்...
கதிரவனின் பார்வை பட்டு
மொட்டவிழ காத்து நிற்கும்
தாமரைகள் நிரைந்த‌
தடாகங்களும்...
குஞ்சுகளைக் கூட்டில் விட்டு
நீர்நிலைகளை நாடி
கூட்டங்கூட்டமாய் பறக்கும்
பறவைகளும்...
மேகங்களுடன் ரகசியம் பேசும்
உயர்ந்த மலைகளுமாக‌...
மெல்லியதாய் ஒளிபடர்ந்து
சிலுசிலிர்த்து வீசும் காற்றை
சீறி ஊடுருவும்
தொடர் வண்டியின்
இதமான தாலாட்டில்
பயணித்தேன்...!
அந்தக் காலைப்பொழுதில்
ஒன்ற‌ன்பின் ஒன்றாக‌
இக்காட்சிக‌ளை ர‌சித்த‌ப‌டியே...
தொடர்வண்டியிலே
தொடருது என் பயணம்...!

- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai317.htm
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_september2009.htm)

Saturday, January 8, 2011

தேடல்



தேடல்
என் கண்களுக்கு மட்டும் அல்ல
உன் கால் தடம் தேடும்
என் பாதங்களுக்கும் தான்...

 - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1832/)

விழிச்சிறை


உன் தூண்டில் பார்வையில்
என்னை சிக்க வைத்தாய்
குற்றமென்று
என் விழிச் சிறையில்
உன்னை சிறை வைத்தேன்
சிறை உன்னை
மாயக் கள்வன் ஆக்கியதோ!!!
சிறையில் இருந்தபடியே
கைப்பற்றி விட்டாயே
என் இதய சிம்மாசனத்தை!...

  - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)


#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1793/)

நட்சத்திரம்


வான வீதியில் பகலெல்லாம்
மேகங்களுக்கு இடையே
தென்றலுடன்
துள்ளி குதித்தாடிய
வான் மகள்
உலாவிய இடத்தில் இருந்து
வழித் தவறாதிருக்க
அவள் ஆடையிலிருந்து
சிதறிய முத்துக்கள்
இரவில் அவளுக்கு வழிகாட்டும்
நட்சத்திரங்களாய் மின்னுகின்றனவோ....

             - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)




#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1793/)

நிழல்


பிறந்தது முதல்
மண்ணில் புதையுரும் வரை
என்னுடன் இருப்பது
நீ மட்டுமே
ஒளியின் பிரகாசத்தில்
என் பின் மறைந்து
இருளின் குளுமையில்
அதனுடன் ஒன்றாகி கலந்து
கதிரவன் தோன்றி மறையும்
காலத்துகிடையே
வளர்ந்து தேய்ந்து வளரும் நீ
என்னுடன் ஒட்டிப் பிறந்த
என் இரட்டைப் பிறவியே....

             - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1793/)

இருவழிப் பாதை



இன்றய இருவழிப்
பாதையை தான்
அன்றே அனில் மீது
எங்கள் ராமன்
வரைந்தானோ!.... 
     - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி

வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1749/)

முதியோர்


கடந்து வந்த‌
நாட்களை
காலம் முகத்தில்
அச்சிடக்
காணவேண்டியவை எல்லாம்
தேடித்தேடிக் கண்ட‌
களைப்பில் பார்வை குன்ற‌
ஒடியோடி உழைத்து
உடலும் சோர்வு
அடைய‌
கம்பீரமாக எதிர்நோக்கிய‌
வாழ்கையை எண்ணங்கள்
அசைபோட‌
கால மாற்றங்களுக்கு
சாட்சியாய்
காலம் கற்றுத்தந்த‌
பாடங்களுக்கு பதிவேடாய்
நம் அனைவரின் இல்லங்களிலும்
ஓரமாய் தள்ளாடும்
அனுபவ அந்தாதி
படிக்கப்படாமலே...

       - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_january2010.htm)
முத்துக்கமலம் இணைய இதழ்( http://www.muthukamalam.com/muthukamalam_kavithai378.htm)
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/2037/)

என் அன்புக் காதலா


பாலோளி வீசி
முழும‌தி உலா வ‌ர‌
அவ்வோளியை பிரதிப‌லித்து
அந்தி ம‌ல்லிக‌ள்
ம‌ண‌ம் வீச‌
சில்லேனத் தென்ற‌ல்
ம‌ர‌ இலைக‌ளில்
இசை மீட்ட‌
வெண்ம‌தி த‌ன் முக‌ம்
பார்க்க‌ தோதாக‌
ச‌ல‌ன‌மின்றி ஒடிய‌
நிரோடையில்
ஆங்காங்கே துள்ளி
குதித்த‌ மீன்க‌ளுமாக‌
இய‌ற்கை அழ‌கேல்லாம்
கொட்டி கிட‌ந்த‌
அந்த‌ இர‌வையும்
ர‌சிக்காது
வாடி நின்றேன்
அழ‌கா உன் வ‌ருகைக்காக‌
நீ இல்லா இட‌த்தில்
அமுத‌மும் க‌ச‌கின்ற‌ போது
இவையேல்லாம் எம்மாத்திற‌ம்....

                         - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_january2010.htm)
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai390.htm)

Tuesday, January 4, 2011

ம‌லைக‌ள்


ப‌சுமையில் முக்குளித்து
ப‌ட்சிக‌ளை உள்ளடக்கி
முகில் முன்நின்று வ‌ழிந‌ட‌த்தும்
மேக‌ ஊர்வ‌ல‌‌த்தில்
சிர‌ம் உய‌ர்த்தி
கால‌த்தின் சாட்சியாய்
நீண்டு அக‌ண்டு
உய‌ர்ந்து க‌ம்பீர‌மாக‌ நிற்கும்
ம‌லை சிகரங்‌களே
நீங்க‌ள்
என்றுமே இய‌ற்கையின்
பிர‌ம்மாண்ட‌ம்
விண்ணை துளைத்து
வேற்று கிர‌க‌ம்
ஆராயும் விஞ்ஞானியையும்
சிறு பிள்ளையாக்கி
பிர‌ம்மிக்க‌ வைக்கும்
திற‌ந்த‌வெளி அருங்காட்சிய‌க‌ம் நீங்கள்.......
                  - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=310081510&format=html)

Monday, January 3, 2011

மழைக்கவிதை


மழைக்கவிதை

ஆகாயத்தில்
கரிநாள்
கார்மேகங்கள் சூழ்ந்து
மத்தள‌ம் இடித்து
பிரியாவிடை கொடுத்து
மழைத்துளி ஒவ்வொன்றையும்
பூமிக்கு தாரைவார்த்தது...



எய்திய வேகத்தில்
மண்ணை அடையும்
துளிகள் அதனோடு
ஐக்கியமாகி வளம்சேர்த்தது...
கரிய ஒழுங்கைகளை
அடையும் துளிகள்
தாயின் கைவிட்டோடிய‌
குழந்தை மீண்டும்
தாயிடமே குதித்தோடுவது போல்
விழுந்த வேகத்தில்
வானை தொட
தெரித்தும் தோல்வி அடைய
தலைதாழ்த்தி அமைதியாய்
கால்வாயை நாடுகின்றன...

சமுத்திரத்தில் மோட்சம்
அடைய அன்று
கதிரொலிகளால்
வானை அடைந்து
மீண்டும் மழைத்துளியாய்
மண்ணை சேர.......

- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3832)
திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=311010221&format=html)