Saturday, January 8, 2011

என் அன்புக் காதலா


பாலோளி வீசி
முழும‌தி உலா வ‌ர‌
அவ்வோளியை பிரதிப‌லித்து
அந்தி ம‌ல்லிக‌ள்
ம‌ண‌ம் வீச‌
சில்லேனத் தென்ற‌ல்
ம‌ர‌ இலைக‌ளில்
இசை மீட்ட‌
வெண்ம‌தி த‌ன் முக‌ம்
பார்க்க‌ தோதாக‌
ச‌ல‌ன‌மின்றி ஒடிய‌
நிரோடையில்
ஆங்காங்கே துள்ளி
குதித்த‌ மீன்க‌ளுமாக‌
இய‌ற்கை அழ‌கேல்லாம்
கொட்டி கிட‌ந்த‌
அந்த‌ இர‌வையும்
ர‌சிக்காது
வாடி நின்றேன்
அழ‌கா உன் வ‌ருகைக்காக‌
நீ இல்லா இட‌த்தில்
அமுத‌மும் க‌ச‌கின்ற‌ போது
இவையேல்லாம் எம்மாத்திற‌ம்....

                         - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_january2010.htm)
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai390.htm)

2 comments:

  1. சில்லேனத் தென்ற‌ல்
    ம‌ர‌ இலைக‌ளில்
    இசை மீட்ட...

    கூதற்காற்றில் நடனமிடும் இலைகளின் சப்தங்களுக்கு இப்படியும் ஒரு கவித்துவம்... பிண்ணுகிறீர்கள் போங்கள்...

    ReplyDelete
  2. குளுமையுட்டும் தங்களின் பாராட்டிற்கு மிக்க‌ நன்றி.

    ReplyDelete